Idhayam Matrimony

25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      இந்தியா
Nitin-Gadkari

Source: provided

புதுடெல்லி : 25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

தற்போது இருவழிச்சாலையாக உள்ள 25 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடி செலவில் இப்பணி மேற்கொள்ளப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாராகி வருகின்றன. 2 ஆண்டுகளில் இப்பணி முடிவடையும் என்று நம்புகிறோம். இந்த சாலை பணிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அவை முடிந்தவுடன், சாலை விபத்துகள் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதுபோல், 16 ஆயிரம் கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகள், ரூ.6 லட்சம் கோடி செலவில் 6 வழிச்சாலைகளாக மாற்றப்படும்.

மேலும், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மலை மாநிலங்கள் ஆகியவற்றில் நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு மோடி அரசு உயர் முன்னுரிைம அளித்து வருகிறது.காஷ்மீரில் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள சாலை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் எளிதான பயணத்துக்காக 105 சுரங்கங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து