தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025      தமிழகம்
Modi-1 2025-04-06

Source: provided

ராமேஸ்வரம் : தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, தி.மு.க. கூட்டணி அரசைவிட தற்போதைய மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது, வளர்ச்சியைடந்த பாரதம் நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் வல்லமை வளர்ச்சியைப் பொருத்து, பாரதத்தின் வளர்ச்சியும் விரைவாகும்.

2014 முன்னர்வரையில் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிகளவில் உதவி புரிந்துள்ளது. தமிழ்நாட்டின் கட்டமைப்புதான், பாரத அரசின் முதன்மை. கடந்த 10 ஆண்டுகளிலே, தமிழ்நாட்டின் ரயில்வே துறை பட்ஜெட்டில் 7 மடங்குக்கும் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் செய்தபின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும்; அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். 2014 ஆண்டுக்கு முன்னர்வரையில், ஒவ்வோர் ஆண்டும் ரயில் துறை திட்டங்களுக்காக வெறும் ரூ. 900 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் கூட்டணியில் யார் ஆட்சி அமைத்திருந்தார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை. இந்தாண்டு, தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து