முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரி நாயகனாக நடிக்கும் மண்டாடி

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      சினிமா
Mandadi 2025-04-21

Source: provided

’மண்டாடி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ‘மண்டாடி’ குறித்து இயக்குநர் மதிமாறன் பேசும் போது, “சூரிக்காக உருவாக்கப்பட்ட இந்த கதாபாத்திரத்தை நினைக்கும் போது எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்தக் கதாபாத்திரத்துக்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. உடல் மற்றும் மன வலிமையும் தேவைப்பட்டது. அதை சூரியால் பூர்த்தி செய்ய முடியும் என்றார். 

மேலும், ’மண்டாடி’ பெயருக்கான அர்த்தம் என்னவெனில், “காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர் என்றார். 

எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் சூரி, சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து