முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      உலகம்
Pope 2025-03-11

Source: provided

வாடிகன் : புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்? விதிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. சுமார் 12 ஆண்டுகள் போப் ஆண்டவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைந்துள்ள நிலையில், புதிய போப் ஆண்டவர் தேர்வு எப்படி நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 

புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு தொடங்கும். 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி புதிய போப் தேர்வுக்கான ரகசிய நடைமுறைகளை தொடங்குவார்கள். வாடிகனில் உள்ள சிஸ்டைன் ஆலையத்தில் வைத்து இந்த நடைமுறைகள் நடைபெறும். புதிய போப் தேர்வு நடைமுறையில் ஈடுபட்டு இருக்கும் கார்டினல்கள் வெளி உலக தொடர்பு இன்றி இருப்பார்கள். ஊடகங்களிடம் மட்டும் இன்றி போன்கள் மூலமாகவும் யாருடனும் தொடர்பில் இருக்க மாட்டார்கள். புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடடைபெறும். 

இந்த நடைமுறைகளுக்கு பின்னர் கருப்பு நிற புகை சிக்னல்கள் வெளியிடப்பட்டால் போப் தேர்வு செய்யபடவில்லை என்பதை குறிக்கும். வெள்ளை நிற புகை குறியீடு வந்தால், புதிய போப் தேர்வு செய்யப்பட்டதாக அர்த்தம். புதிய போப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவருக்கு முறைப்படி கோரிக்கை வைக்கபடும். அவர் ஏற்றுக்கொண்டால் புதிய போப் ஆக அறிவிக்கப்படுவார். செயிண்ட் பீட்டர் பசிலிகாவில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடும். அதன்பிறகு புதிய போப், செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் இருந்து மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து