முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். கிரிக்கெட் வாரியம் மறுப்பு

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      விளையாட்டு
Pak 2024 11 13

Source: provided

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரை இந்தியாவில் ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.   இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட இந்தியாவுக்கு பயணிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற விதம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நக்வி பாராட்டுதல்களைத் தெரிவித்தார். உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் லாகூரில் நடைபெற்ற போது பாகிஸ்தான் மகளிர் அணி தகுதிச்சுற்றில் 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மகளிர் அணி அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மே.இ.தீவுகள், தாய்லாந்து, வங்கதேச அணிகளை வென்று ஐ.சி.சி. உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________________________________________

ஆட்ட நாயகன் விருது? கோலி கேள்வி

 ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்களும், படிக்கல் 61 ரன்களும் அடித்தனர். ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது படிக்கலுக்கு செல்ல வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- உண்மையிலேயே  இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள இரண்டு புள்ளிகள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.  இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே என்னை பொறுத்தவரை இந்த ஆட்டநாயகன் விருது அவருக்கு தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதை ஏன் எனக்கு கொடுத்தார்கள்? என்று தெரியவில்லை. என்று விராட் கோலி கூறினார். 

______________________________________________________________________________________________________

லிவிங்ஸ்டன் குறித்து சேவாக் 

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் முன்னணி ஆல்ரவுண்டர்களான பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) மற்றும் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) ஆகியோர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர்.  . 

இந்நிலையில்  இது குறித்து பேசிய வீரேந்திர சேவாக்  கூறுகையில், "மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டனிடம் வெற்றிக்கான பசி நீங்கிவிட்டது போல் உணர்கிறேன். அவர்கள் இங்கே (இந்தியா) விடுமுறையை கழிக்க வருகிறார்கள். அவர்கள் வருகிறார்கள், வேடிக்கை பார்க்கிறார்கள், வெளியேறுகிறார்கள். அணியின் வெற்றிக்காக போராடுவதற்கான விருப்பம் அவர்களிடம் தெரியவில்லை. தங்களுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை" என்று கூறினார். 

______________________________________________________________________________________________________

சி.எஸ்.கே. அணி குறித்து ஸ்ரீகாந்த் 

 ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான சென்னை இம்முறை பேட்டிங்கில் தடுமாறுவதே இந்த மோசமான செயல்பாடுகளுக்கு காரணம். பேட்ஸ்மேன்கள் ஒருவரு கூட அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்காதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, சி.எஸ்.கே அணிக்கு இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. நன்றாக விளையாடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் பந்தை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்க விட்டதைப் பார்த்தது விருந்தாக அமைந்தது. மீதமுள்ள ஆட்டங்களுக்காக சி.எஸ்.கே அணிக்கு என்னுடைய ஒரே ஆலோசனை என்னவெனில் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி விளையாட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து