எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சமூக நீதி,நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றினால், மக்கள் நிச்சயமாக நம்மை மறக்கமாட்டார்கள் என்று யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அதிகாரம் என்பது இந்தச் சமூகத்துக்கும், சக மனிதர்களுக்கும், எளியோர்களுக்கும் உதவுவதாக அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாக அமையவேண்டும்.
பாராட்டு விழா....
சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியல் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டம் மற்றும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா தமிழக முல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஏப்.26) நடைபெற்றது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ள உங்கள் எல்லோரையும் நான் முதலில் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மாணவர்களுக்கு பயிற்சி...
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்த வேண்டும். மாணவர்களுடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வியைக் கடந்து, மாணவர்களுடைய திறனை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் எல்லாம் நினைத்தோம். அதிலும் குறிப்பாக வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பம், அந்த வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி, நம்முடைய மாணவர்களுடைய திறமை வளரவேண்டும். எப்படிப்பட்ட போட்டித் தேர்வாக இருந்தாலும், அதை கையாளும் வகையில் நம்முடைய மாணவர்களுக்குப் பயிற்சி கிடைக்கவேண்டும்; அதையும் நம்முடைய அரசே செய்யவேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம்.
பலனளித்திருக்கிறது...
இந்தத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களும் இளைஞர்களும் நிச்சயமாக தங்களுடைய லட்சியங்களை அடையவேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும், வளர்ந்து வரவேண்டும்; என்பதற்காக தான் ‘நான் முதல்வன்’ என்று பெருமைப்படக்கூடிய அளவுக்கு இந்தத் திட்டத்தை ‘நான் முதல்வன்’ என்கின்ற அந்த அடிப்படையில் தான் இதை உருவாக்கி இருக்கிறோம். ‘நான் முதல்வன்’ என்கின்ற தன்னம்பிக்கை ஊட்டுகின்ற பெயர் வைத்து, 2022-ம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாள் அன்று தான் தொடங்கி வைத்தேன். உங்கள் மீதும், இந்தத் திட்டத்தின் மீதும் நாங்கள் வைத்த நம்பிக்கை பலனளித்திருக்கிறது என்ற செய்தியை பார்க்கின்றபோது மகிழ்ச்சியோடும், பெருமையோடும், நீங்கள் எல்லாம் எப்படி ஒரு பூரிப்புடனும், புளங்காகித உணர்வுடனும் கலந்து கொண்டிருக்கிறீர்களோ, அதேபோல தான் நாங்களும் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக கலந்து கொள்ள வந்திருக்கிறோம்.
பெரிய நிறுவனங்களில்...
சாமானிய வீடுகளில், பிறந்து சாதனையாளர்களாக நாளைய வரலாற்றை எழுதக் கூடியவர்களாக வளர்ந்திருக்கின்றீர்கள். உங்களை பாராட்டுவதுதான், திராவிட இயக்கத்தின் வழிவந்திருக்கக்கூடிய எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.கல்விதான் நமக்கான ஆயுதம். எந்த இடர் வந்தாலும், கல்வியை மட்டும் நாம் விட்டுவிடக் கூடாது. அதனால்தான், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தோம். அதைத் தொடர்ந்து “புதுமைப்பெண்” திட்டம், “தமிழ்ப்புதல்வன்” திட்டம், “கல்லூரிக் கனவு” திட்டம், “சிகரம் தொடு” திட்டம், “உயர்வுக்குப் படி” திட்டம் என்று ஏராளமான திட்டங்களை தொடங்கி, கல்வியைக் கொடுத்து, “நான் முதல்வன்” போன்ற திட்டங்களால், பெரிய பெரிய நிறுவனங்களில் நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் வேலைக்கு தேர்வாகியுள்ளதை பார்க்கின்றபோது நாம் பூரிப்பு அடைகிறோம்.
மதிப்பு கூடுதலாகும்...
தமிழ்நாட்டிற்கு என்று ஒரு ‘அறிவுமுகம்’ இருக்கிறது. ஒரு ஐஏஎஸ், ஒரு ஐபிஎஸ் தமிழ்நாட்டு கேடராக இருந்தால், அவர்களுக்கான மதிப்பே தனி, அதுவும் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களாக இருந்தால், இன்னும் மதிப்பு கூடுதலாகிவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் நம்முடைய இளைஞர்கள் தேர்வாகிறது குறைந்துவிட்டது. ஆனால், இன்றைக்கு அந்த கவலையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்.
எளியோர்களுக்கு உதவ....
குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தயாரான உங்களுக்கு, நம்முடைய அரசு எப்படியெல்லாம் பயிற்சி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உங்களுடைய சுமைகளை குறைக்க ஊக்கத்தொகை எல்லாம் கொடுத்து, உங்களில் பலரும் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டிகளில் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்தோம். இதுவே, இன்னும் பல பேரை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.-ஆக ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதற்கான உங்கள் பணியை, நீங்கள் தேர்வான அன்றைக்கே தொடங்கிவிட்டீர்கள். அதிகாரம் என்பது இந்தச்சமூகத்துக்கும், சக மனிதர்களுக்கும், எளியோர்களுக்கும் உதவுவதாக அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாக அமையவேண்டும்.
மூன்றையும் மனதில்...
இன்றைக்கு அதிகாரம் உங்கள் கைகளை நோக்கி வர இருக்கிறது. அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களுக்கு முன்உதாரணமாக பல பேர் இருப்பார்கள். இனிமேல் நீங்கள் பல பேருக்கு முன்உதாரணமாக ஆகவேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். இன்றைக்கு தேர்வாகி இருக்கின்ற நீங்கள் சிறப்பாக பணியாற்றுவதன் மூலமாக தான் அந்த நிலையை அடையமுடியும். என்னுடைய பொதுவாழ்க்கை அனுபவத்தில் இருந்து இதை சொல்கிறேன். முதலில் மக்களுடைய மனதில் இடம் பெறவேண்டும். சமூகநீதி,நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றினால், மக்கள் நிச்சயமாக நம்மை மறக்கமாட்டார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
தவறுதலாக பாக். எல்லைக்குள் நுழைந்த எல்லை பாதுகாப்புப்படை வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
26 Apr 2025டெல்லி : எல்லை பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
-
இந்தியாவை விட்டு வெளியேற கெடு: வாகாவில் குவியும் பாகிஸ்தானியர்கள்
26 Apr 2025அட்டாரி : ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏரா
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு
26 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தை கண்டுபிடித்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
கழுத்தை அறுத்து விடுவேன் : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து சைகை செய்த பாக். தூதர்
26 Apr 2025ஜம்மு : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என பாகிஸ்தான் தூதர் சைகை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு
26 Apr 2025புதுடெல்லி, பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு
26 Apr 2025வாடிகன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி
26 Apr 2025ஹைதராபாத், பாகிஸ்தானை வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டு
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
26 Apr 2025சென்னை : தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்த நிலையில் நேற்று தங்கம் மாற்றமின்றி விற்பனையானது.
-
அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்: காஷ்மீர் பிரச்சினை குறித்து அமெரிக்க அதிபர் கருத்து
26 Apr 2025வாஷிங்டன் : காஷ்மீர் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Apr 2025சென்னை, கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாக். பிரதமர் ஷெபாஸ் அறிவிப்பு
26 Apr 2025புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப
-
தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனை தடைக்கு நடவடிக்கை: அமைச்சர் உறுதி
26 Apr 2025சென்னை, தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன்; விரைந்து வந்து நலம் விசாரித்த முதல்வர்
26 Apr 2025சென்னை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார்.
-
கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றபோது விபரீதம்: 2 தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி மாணவிகள் கடலில் மூழ்கி பலி
26 Apr 2025பெங்களூரு : தமிழக மருததுவக்கல்லூரி மாணவிகள் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
'ரெங்கா.. கோவிந்தா.. கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
26 Apr 2025திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "ரெங்கா..
-
சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
26 Apr 2025சேலம் : சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவ
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: முன்பதிவுகளை ரத்து செய்த 12 லட்சம் சுற்றுலா பயணிகள்
26 Apr 2025புதுடெல்லி, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து
-
ஐ.பி.எல். தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங் இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது: ரிங்கு சிங்
26 Apr 2025கொல்கத்தா : இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
-
எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி
26 Apr 2025ஸ்ரீநகர் : எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டனர். அவர்களை இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
-
பஹல்காம் பாதுகாப்பு குறித்து கேள்வி: எதிர்க்கட்சிகள் மத்திய அரசு விளக்கம்
26 Apr 2025புதுடெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி
26 Apr 2025வாடிகன், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்கு தற்காலிக தடை
26 Apr 2025பஹல் : உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
-
கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு தொடக்கம்
26 Apr 2025புதுடெல்லி : கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ளது.
-
ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து: நூற்றுக்கணக்கானோர் காயம்
26 Apr 2025ஈரான் : ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 406 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மாத ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Apr 2025சென்னை : முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி ரூ.1 லட்சமாகவும