முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகமது ஷமி புதிய சாதனை

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      விளையாட்டு
Mohammed-Shami

Source: provided

ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில்  முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியஐதராபாத் அணி 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதல் ஓவரை வீசிய முகமது ஷமி தனது முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். இதுவரை அவர் 4 விக்கெட்டுகளை முதல் பந்திலேயே பந்தில் எடுத்துள்ளார். இதற்கு முன்பாக ஜாக் காலிஸ், கேஎல் ராகுல் மற்றும் பில் சால்ட் ஆகியோரை முதல் பந்திலேயே முகமது ஷமி அவுட் செய்துள்ளார்.

________________________________________________________________________________________

கடவுள் தண்டிக்கிறார்: கும்ப்ளே

சி.எஸ்.கே.  முதல் முறையாக சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்று நடப்பு ஐபிஎல் தொடரில் 7-வது தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘பேபி ஏபிடி’ என்று வந்த புதிதில் வர்ணிக்கப்பட்ட டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். இந்நிலையில், பிரேவிஸ் ஆட்டத்தைப் பார்த்து பிரமித்த இந்திய அணியின் முன்னாள் நம்பர் 1 ஸ்பின்னரும், கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே பிரமித்துப் போனதாகத் தெரிவித்தார். 

பிரேவிஸ் குறித்து அவர் கூறும்போது, “அவர் ஸ்பின்னை ஆடும் விதம் தனிச் சிறப்பானது.  ரச்சின் ரவீந்திரா, மாத்ரே மற்றும் பதிரனாவுடன் சி.எஸ்.கே. அணியைக் கட்டமைக்க இளம் படை உள்ளது. “டெவால்ட் பிரேவிஸ் மட்டுமே ஏதோ தீவிரம் காட்டினார். ஆனால் அவரது இன்னிங்ஸும் தொடரின் ஆகச்சிறந்த கேட்சினால் முடிந்தது. சி.எஸ்.கே.வுக்கு எதிராக அனைத்தும் உள்ளன. சீசனில் ஆகச்சிறந்த கேட்சும் அவர்களுக்கு எதிராகவே எடுக்கப்பட்டுள்ளது. சென்னையைக் கடவுள் தண்டிக்கிறார் என்று தோன்றுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

________________________________________________________________________________________

சி.எஸ்.க். அணி குறித்து ரெய்னா 

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியது: “எம்.எஸ்.தோனிதான் இறுதி முடிவை எடுப்பார் என்று அவர்கள் எப்போதும் கூறுவார்கள்.  ஆனால், எனக்குத் தெரிந்து இந்த முறை தோனி அவ்வளவாக இதில் ஈடுபாடு காட்டவில்லை என்றே தோன்றுகிறது.  43 வயதில் இன்னும் அணிக்காக அனைத்தையும் கொடுக்கிறார். தோனி பிராண்டுக்காக ஆடுகிறார். அவர் தன் பெயருக்காகவும், ரசிகர்களுக்காகவும்தான் ஆடுகிறார். ஆனாலும் இன்னும் முயற்சி எடுத்து ஆடுகிறார். 

43 வயதில் விக்கெட் கீப்பிங் செய்கிறார். கேப்டன்சியில் அணியின் பொறுப்பைச் சுமக்கிறார். மற்ற 10 வீரர்கள் என்ன செய்கின்றனர்? ரூ.18 கோடி, ரூ.17 கோடி, ரூ.12 கோடி பெறுபவர்கள் கேப்டனின் கோரிக்கைக்கு தன் பங்கைச் செலுத்துவதில்லை.  ஏலத்தில் வீரர்களைச் சரியாக தேர்வு செய்யவில்லை என்பது தோனிக்கு தெரியும். அவர் இருந்திருந்தால் இதனை அனுமதித்திருக்க மாட்டார்” என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

________________________________________________________________________________________

மெண்டிஸுக்கு குவியும் வாழ்த்துகள்

இலங்கையைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் உடனான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை 19.5 ஓவா்களில் 154 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஹைதராபாத் 18.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் தோற்றது. சொந்த மண்ணில் இது சென்னைக்கு 4-ஆவது தோல்வியாகும்.

இந்தப் போட்டியில் சி.எஸ்.கே. அணிக்காக அறிமுகமாகிய டெவால்டு ப்ரீவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். ஹர்ஷல் படேல் வீசிய ஓவரில் டெவால்டு ப்ரீவிஸ் அடித்த பந்து லாங்க்-ஆப் ஃபீல்டிங்கில் நின்றிருந்த கமிந்து மெண்டிஸ் தனது இடது பக்கம் சென்ற பந்தினைத் தாவிப் பிடித்தார். இந்த கேட்ச் ஆட்டத்தையே மாற்றியது. டெவால்டு ப்ரீவிஸ் ஆட்டமிழந்த பிறகு சி.எஸ்.கே. அணி ரன்களே அடிக்காமல் 154க்கு சுருண்டது குறிப்பிடத்தக்கது. கமிந்து மெண்டிஸின் இந்த கேட்ச் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த ஐ.பி.எல்.-இன் சிறந்த கேட்ச் இதுதான் எனவும் வர்ணனையாளர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் புகழ்ந்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து