முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு மறுதேர்தலை தடுத்து நிறுத்திய போலீஸார்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

மாலே, அக்.21 - மாலத்தீவு அதிபரைத் தேர்ந்தெடுக்க நடைபெறவிருந்த மறுதேர்தலை போலீஸார் தடுத்தி நிறுத்தினர். இதனால் மாலத்தீவு அரசியலில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மறுதேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் தேர்தல் அலுவலகத்துக்குள் போலீஸார் நுழைந்து தேர்தல் தொடர்பான பொருள்களை விநியோகிப்பதை தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் தேர்தல் நிறுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தது. இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ள போலீஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா நவாஸ், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. இதுகுறித்து அதிபர் வாஹித், பாதுகாப்பு கவுன்சில், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணயர் புவாட் தௌபிக் இது ஜனநாயகத்தின் கறுப்பு தினம். தேர்தல் எப்போது நடைபெற வேண்டும் என்பதை போலீஸார் முடிவு செய்ய முடியாது என்றார். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும் என்று மாலத்தீவு ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதனிடையே அக்டோபர் மாதம் 26_ம் தேதிக்குள் அதிபர் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் ஆணையம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதவிக்காலம் முடிந்து வெளியேற உள்ள முகமது வாஹித் வலியுறுத்தியுள்ளார். மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத் கடந்த ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. 

   

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்