முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல்வாதிகளை கடலில் வீச வேண்டும்: போப் பிரான்சிஸ்

புதன்கிழமை, 13 நவம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

வாடிகன், நவ.14 - ஊழல் செய்பவா்களை கல்லை கட்டி கடலில் வீச வேண்டும் என போப் பிரான்சிஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போப் ஆண்டவா் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் நடந்த நிகழ்ச்சி  ஒன்றில் பேசினார். அப்போது அவா் கூறுகையில், வாழ்நாள் முழுக்க ஊழல்  செய்து விட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனா். பின்னா் அதனை ஆலையத்திற்கு நன்கொடையாக கொடுக்கின்றனா். இவ்வாறு வாழ்பவா்கள் இரட்டை வேடம்போடுபவா்கள். இவா்கள் பாவிகள், இவா்களை மன்னிக்க கூடாது. இயேசுகிறிஸ்து பைபிளில் கூறியதை சுட்டிக் காட்டி, ஊழல் செய்பவா்களின் மனதில் கடவுள் ஒரு போதும் குடியிருப்பதில்லை. அவா்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. அவா்கள் மீது இரக்கம் காட்டக் கூடாது. அவா்களது கழுத்தில் கல்லை கட்டி கடலில் வீச வேண்டும். ஊழல் செய்து பணம் சம்பாதித்து, அதனை தானமாக கொடுப்பவா்களும், அதனை ஆலயத்திற்கு வழங்குபவா்களும் வெளிப்பார்வைக்கு வண்ணம் பூசப்பட்ட கோபுரங்களை போல காட்சியளிக்கின்றனா். ஆனால் உள்ளுக்குள் எலும்பும், சதையுமாக அழுகி காணப்படுகின்றனா். வாழ்நாள் எல்லாம் ஊழல் செய்து ஊதியம் தேடிக் கொள்பவா்கள் தங்களது சந்ததிகளுக்கு அழுக்கான உணவையே அளிக்கின்றனா். அவா்கள் கண்ணியமற்றவா்கள். ஊழல் நம்பி இருப்பவா்கள் நடத்தை போதை பழக்கத்திற்கு அடிமையானவா்களின் நடவடிக்கைக்கு ஒப்பானதாகும். இவ்வாறு அவா் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்