முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.27 - பத்தாம் வகுப்பு ,மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. 

தமிழக முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி), மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஆகியவற்றை இன்று வெளியிட ஆணையிட்டுள்ளார். இந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், கீழே குறிப்பிட்டுள்ள இணைய தளங்கள் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், தங்களது மதிப்பெண்கள் பற்றிய விவரங்களையும் இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

இணைய தள முகவரிகள்:-

www.pallikalvi.in, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in

இணையதளம் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) சேவை அளிக்கும் முகவரி:

www.tnpubliclibraries.gov.in

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்