முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ஐ.எஸ்.ஐ. விதிமுறைகளை மீறிவிட்டேன்:ஹெட்லி புலம்பல்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      உலகம்
Image Unavailable

சிகாகோ,மே.- 29  - மும்பை தாக்குதல் சதித்திட்டதை என் நண்பனிடம் கூறியதன் மூலம் ஐ.எஸ். ஐ. விதிமுறைகளை மீறிவிட்டேன் என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி சிகாகோ கோர்ட்டில் தெரிவித்துள்ளான்.  மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி கடந்த பல நாட்களாக சிகாகோ கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறான். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. பாகிஸ்தான் நாட்டு தந்தைக்கு பிறந்த ஹெட்லி, முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன். அவன் கிறிஸ்தவ பெயரை வைத்துக்கொண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்திற்காக செயல்பட்டுவந்துள்ளான். மும்பை தாக்குதல் சம்பவத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்பது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஆயத பயிற்சி மற்றும் உளவு பார்க்கும் பயிற்சி விதிமுறைகளில் ஒன்றாகும். ஆனால் இந்த தாக்குதல் சதித்திட்டத்தை தன்னுடைய நண்பன் ராணா என்பவனிடம் ஹெட்லி தெரிவித்துள்ளேன். கனடாவில் வர்த்தகராக ராணா பணியாற்றி வந்தான். இவனும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன். மும்பை தாக்குதல் சதித்திட்டம் குறித்து ராணாவிடம் தெரிவித்தது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் விதிமுறைகளை நான் மீறியது மாதிரி என்று சிகாகோ கோர்ட்டில் ஹெட்லி கூறியுள்ளான். மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய அமெரிக்கா தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஹெட்லியிடம் விசாரணையை சிகாகோ கோர்ட்டு தீவிரப்படுத்தியுள்ளது. பின்லேடன் பாகிஸ்தானில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததற்காக அமெரிகாக கடும் கோபம் அடைந்துள்ளது. தற்போது மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தால் அமெரிக்காவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும்.
இதற்கிடையில் மும்பை தாக்குதலை ஹெட்லியின் இரண்டாவது மனைவி பார்த்து ரசித்துக்கொண்டியிருந்ததும் தெரியவந்துள்ளது. ஹெட்லியின் இரண்டாவது மனைவி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்