முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தியை எதிர்த்து திருநங்கை போட்டி

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.20 - ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி 

தொகுதியில் அவரை எதிர்த்து சோனம் கின்னர் என்ற திருநங்கை போட்டியிடு கிறார். 

சுயேச்சை  வேட்பாளராகப் போட்டியிடும் இவர் இந்திய அரசியலில் உசயமாகி உள்ள 3-வது அணியினர் திருநங்கைகள்தான் என்று அவர் கூறினார். பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கும் உள்ளது போல் எங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். மக்களவை, சட்டப் பேரவைகளில் குறைந்தது 2 இடங்களாவது எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றார். காங்கிரஸின் கோட்டையான இந்தத் தொகுதியில் எனக்கும், ராகுலுக்கும் தான் போட்டி. எங்களுக்கு குடும்பம் கிடையாது. சாதி பாகுபாடசு கிடையாது. மற்றவர்களை விட எங்களால்தான் சிறப்பாக செயல்பட முடியும். என்னிடம் ரூ. 11.39 லட்சம் மற்றும் 36 பவுன் நகை உள்ளது என்று இவர் பிரமாண பத்திரத்தில் தெரிவி்த்துள்ளார்.

மோடியை எதிர்த்து திருநங்தை ஒருவர் போட்டியிடத் தயாராக உள்ளதாக திருநங்கை ஒருவர் போட்டியிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவி்த் தார். கமலா என்ற அந்தத் திருநங்கை உ.பி. மாநிலத்தில் உள்ள பூர்வாஞ்சல் பகுதி திருநங்கை சங்கத் தலைவராக உள்ளார்.           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்