முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்சிலோனா ஓபன்: நிஷிகோரி சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பார்சிலோனா, ஏப்.30 - ஸ்பெயினில் நடைபெற்று வந்த பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீரர் கி நிஷிகோரி சாம்பியன் பட்டம் வென்றார். 

இறுதி ஆட்டத்தில் கொலம்பியாவின் சான்டியாகோ கிரால்டோவை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நிஷிகோரி வென்றார். இதன் மூலம் களிமண் தரையில் நடைபெறும் போட்டியில் முதல்முறையாக அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச டென்னிஸ் போட்டியில் நிஷிகோரி வென்றுள்ள 5-வது பட்டம் இது. 

2002-ம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்பெயின் வீரர் அல்லாத ஒருவர் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறை. இப்போட்டியில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற உள்ளூர் நாயகன் ரபேல் நடால், காலிறுதியில் சகநாட்டு வீரரான நிக்கோலஸ் அல்மாங்ரோவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிஷிகோரி இப்போதுதான் முதல்முறையாக களிமண் தரையில் விளையாடியுள்ளார். முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான மிக்கேல் சாங்கை தனது புதிய பயிற்சியாளராக நிஷிகோரி நியமித்த முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்