எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.26 - மத்திய ரயில்வே பட்ஜெட் மம்தாவின் சுயநல பட்ஜெட் என்றும், தன் சொந்த மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரித்துள்ளார் என்றும் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று 2011-2012-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் ரயில்வே வளர்ச்சிக்கும், ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களின் முன்னேற்றத்திற்கும் எந்தவித திட்டமும் இல்லை. ரயில்போக்குவரத்தை அதிகரிக்கவும் எந்தவித புது திட்டமும் அறிவிக்கவில்லை. ஆனால் அவரது சொந்த மாநிலமான மேற்குவங்காளத்தில் மட்டும் பல்வேறு திட்டங்களை மம்தா அறிவித்துள்ளார். நந்திகிராம் மற்றும் சிங்கூரில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் ரயில்வே பட்ஜெட் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அந்த அளவில் இது ஒரு சாதாரண மனிதன் பட்ஜெட் என்றே கூறலாம். பல புதிய ரயில்வே திட்டங்களையும் பட்ஜெட்டில் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேசமயத்தில் கடந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவைகளை நிறைவேற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் பல புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் நிதிநிலைமையோ மிகவும் மோசமாக இருக்கிறது. மோசமாக இருக்கும் நிதிநிலைமையை சரிக்கட்டி வருவாயை பெருக்க எந்தவித திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. இது தேசிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உலகின் மிகப்பெரிய இந்திய ரயில்வேயின் வளர்ச்சியை கடுமையாக பாதிப்பதோடு அதனை பின்னுக்கு தள்ளும் பட்ஜெட்டாக இது உள்ளது. ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கென்று குறிப்பிடத்தக்க திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சில புறநகர் ரயில்களும், ஓரிரு துரந்தோ ரயில்களும் விடப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்திற்கு என்று புதிய ரயில்கள் விடும் அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
மேற்குவங்காள மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மேற்குவங்காளம் மம்தா பானர்ஜியின் சொந்த மாநிலமாகும். அங்கு விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த ரயில்வே பட்ஜெட்டை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி தயாரித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாநிலத்தில் உள்ள நந்திகிராம் மற்றும் சிங்கூரில் அவர் வெற்றிகரமான அரசியல் போராட்டத்தை நடத்தினார். அதனால் அந்த நகரங்களில் பெரிய அளவில் ரயில்வே பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளின் மூலம் தன்னுடைய அரசியல் எண்ணங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள தேசிய வளங்களை அவர் மேற்குவங்காளத்திற்கு கடத்திச் சென்றுள்ளார் என்பதை ஒதுக்கித்தள்ளவோ அல்லது மறுக்கவோ முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத