முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்ச் ஓபன்: 2வது சுற்றுக்கு ஷரபோவா முன்னேற்றம்

திங்கட்கிழமை, 26 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், மே.27 - பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றார்.

சக வீராங்கனை சீனியா பெர்வாக் என்பவரை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஷரபோவா வீழ்த்தினார் .

2012ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற ஷரபோவா 2013ஆம் ஆண்டு செரீனாவுடன் இறுதிப் போட்டியில் மோதினார். 

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை பிளாவிய பனெட்டா, ஆஸ்திரிய வீராங்கனை பட்ரீசியா அச்லெய்ட்னர் என்பவரை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடிய சாபின் லிசிகி பிரான்ஸ் வீராங்கனை பியோனோ பெரோவை 6- 1, 7- 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்