முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப் வெளிநாடு செல்ல அனுமதி

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஜூன் 14 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெளிநாடு செல்ல அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

வெளிநாடு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளோர் பட்டியலில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சிந்து ஐகோர்ட்டில் முஷாரப் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முகமது அலி மஸார், ஷாநவாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முஷாரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை தளர்த்தி உத்தரவிட்டது. 

நோய்வாய்ப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் சிகிச்சை பெற்று வரும் முஷாரப்பின் தாயை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கும் விதமாக மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் இது தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்கு அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் தெரிவித்தது. இதனிடையே லால் மஷித், அப்துல் ரஷித் காஸி கொலை தொடர்பாக இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு கோரிய முஷாரப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த வழக்கு அடுத்த மாதம் 1ம் தேதி விசாரணைக்கு வரும் போது முஷாரப்புக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் பலுசிஸ்தான் முன்னாள் பழங்குடியின தலைவர் அக்பர் புக்தி ஆகியோர் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்