முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் கடத்தப்பட்ட டென்மார்க் நிரூபர் விடுதலை

சனிக்கிழமை, 21 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கோபன்ஹேகன், ஜூன்.22 - சிரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட டென்மார்க்கைச் சேர்ந்த புகைப்பட நிருபர் ஒருவர் 13 மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டென்மார்க்கைச் சேர்ந்தவர் டேனியல் ரை ஓட்டோஸென். புகைப்பட நிருபரான இவர் சிரியாவில் நடைபெற்று வந்த மோதல் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆவணப் படம் தயாரிப்பதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சென்றார். அங்கு டேனியல் ரையை தீவிரவாதிகள் கடந்த ஆண்டு மே மாதம் கடத்திச் சென்றனர். இந்நிலையில் 13 மாதங்கலுக்குப் பிறகு டேனியல் ரையை தீவிரவாதிகள் விடுவித்துள்ளதாக டென்மார்க் அரசு தற்போது தெரிவித்துள்ளது.

போர்க் களங்களில் பணியாற்றியதற்காக வருது பெற்ற டென்மார்க் புகைப்பட நிபுனர் ஜான் கிராரப்பிடம் இவர் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்