முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெறுப்பை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை: ராஜபக்சே

திங்கட்கிழமை, 23 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூன் 24 - பிற பிரிவினர் மீது வெறுப்பை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், அனைத்து சமூகத்தினரும் சுமூகமான உறவை பேண வேண்டும். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார். அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பேருவளை, தர்கா நகர் மற்றும் அளுத்காமா ஆகிய நகரங்களில் புத்த மதவாதிகளுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே இம்மாதம் 15ம் தேதி நிகழ்ந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு புத்த தேசியவாத அமைப்பான பொது பல சேனைதான் காரணமாகும். அதற்கு ஆதாரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்படும் நிலையில் அதிபர் ராஜபக்சே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்