முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி திருக்கோயில் பிரகார தூண்கள் சீரமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 25 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பழமை மாறாத சிற்பங்களுடன் பொற்றாமரை குள கிழக்கு பிரகார தூண்கள் ரூ. 1.70 கோடியில் புதுப்பிக்கப்படவுள்ளன.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் பொற்றாமரை குளம் புராண கால பெருமை மிக்கது. இந்திரன் பழி தீர்த்தது. தருமிக்கு  பொற்கிழி அளித்தது. நக்கீரரை கரை சேர்த்து, அவருக்கு இறைவன் இலக்கணம் உபதேசித்தது. இறைவன் சங்க பலகை தந்தது. சங்கத்தார் கலகம் தீர்த்தது ஆகிய திருவிளையாடல்கள் நடந்தேறி உள்ளன. இக்குளத்தின் தெற்கு பிரகார தூண்களில் கீறல் விழுந்தது கண்டறியப்பட்டது. இதனால் பிரகாரத்தில் உள்ள பழமையான தூண்களுக்கு பதில் புதிய தூண்களை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன் திட்டம் தயாரித்து தமிழக முதல்வரின் ஒப்புதலையும் பெற்றார். தெற்கு பிரகாரத்தின் 73 தூண்கள் ரூ. 1 கோடியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. பாவு கற்கள் அமைத்தால் அந்த தெற்கு பிரகார பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவுறும். பிரகார தூண்களோ நேர்கோட்டில் மிக நேர்த்தியாக அமைத்திருப்பதுடன் கற்களில் வடிவமைக்கப்பட்ட பூ சித்திரங்கள் புதுமையாக உள்ளன. வற்றாத பொற்றாமரை குளத்தின் தெற்கு பிரகாரம் போலவே கிழக்கு பிரகாரமும் தூண்கள் பழமையாகி சீரமைக்கும் நிலையில் உள்ளது. இதையடுத்து அப்பிரகாரத்தில் 32 தூண்கள் மற்றும் மேற்புற பகுதி சீரமைக்கப்படவுள்ளன. இதற்கான நிதி 13 மற்றும் 14வது திட்டக்குழுவிடமிருந்து பெறப்படவுள்ளது. பொற்றாமரை குளத்தில் தற்போது நிரந்தரமாக நீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை இயற்கை முறையில் சுத்தப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தாமரையை குளத்தில் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருக்கோயில் பணிகள் குறித்து தக்கார் கருமுத்து தி. கண்ணனிடம் கோயில் இணை ஆணையர் நா. நடராஜன், உதவி பொறியாளர் பி. குமரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி செயல்படுத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்