முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை இந்தியா திறம்பட சமாளிக்கும்: ராஜ்நாத்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

கொல்லம், செப் 29:

தீவிரவாதத்தால் ஏற்படும் பிரச்சினைகளை மத்திய அரசு திறம்பட சமாளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே அமிர்தபுரியில் நடைபெற்ற மாதா அமிர்தானந்த மயியின் பிறந்த நாள் விழாவில் ராஜ்நாத்சிங் பேசியதாவது,

தேசம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க மாதா அமிர்தானந்தமயி போன்ற ஆன்மீக தலைவர்களின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம். உலக பொருளாதார சக்தியாக மட்டுமின்றி சிறந்த ஆன்மீக சக்தியாகவும் இந்தியா மாறும். இந்த நாட்டுக்கு மிக பெரிய ஆன்மீக பலத்தை தருபவராக அமிர்தானந்த மயி திகழ்கிறார் என்று அவர் பேசினார்.

ராஜ்நாத்சிங், கேரளத்தின் மிக பிரபலமான பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது அவர் கோயிலுக்குள் சுமார் 45 நிமிடங்கள் இருந்தார். அவருடன் மாநில பாஜக தலைவர் கிருஷ்ணதாஸ், கட்சி நிர்வாகிகள் சென்றிருந்தனர். இந்த கோயிலில் உள்ள ரகசிய சுரங்க அறைகளில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் மேல் மதிப்புடைய வைர, வைடூ ரிய தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்