முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகள் குழுவுடன் சந்திரபாபு நாயுடு ஜப்பான் பயணம்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

நகரி - ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் விஜய வாடா–குண்டூர் இடையே அமைக்கப்பட இருக்கிறது.
புதிய தலைநகர் சிங்கப்பூர், ஜப்பான் தொழில் நுட்ப உதவியுடன் நவீன வசதிகளுடன் அழகுற அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதற்காக தொழில் முனைவர்களை ஈர்க்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் மலேசியா சென்றார்.
நேற்று அதிகாலை சந்திரபாபு நாயுடு தனி விமானத்தில் ஜப்பான் புறப்பட்டு சென்றார். அவருடன் 18 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினரும் சென்று உள்ளனர்.
29–ந்தேதி வரை 6 நாள் ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்யும் சந்திரபாபு நாயுடு அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.
விவசாயத்தில் அதிக விளைச்சலை பெருக்கும் தொழில்நுட்பம், ஸ்ரீகாகுளத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்திக்கான திட்டம், உணவு உற்பத்தி, ஆந்திராவில் ஐ.டி. நிறுவனங்கள் அமைப்பது, ஜப்பான் நகரை போல் புதிய தலைநகர் அமைப்பது உள்பட 6 முக்கிய ஒப்பந்தங்கள் பற்றி அவர் பேசுகிறார்.
ஜப்பான் தொழில் அதிபர்களுடன் பேச ஜப்பானிய மொழியையும் அவர் கற்று உள்ளார். தொழில் அதிபர்களை ஈர்க்கும் வகையில் குறும்படம் ஒன்று ஆந்திர அரசு சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அதில் தோன்றும் சந்திரபாபு நாயுடு, ‘வணக்கம், நன்றி உள்ளிட்ட சில வார்த்தைகளை ஜப்பான் மொழியில் பேசி உள்ளார்.
ஜப்பான் மாதிரி நகரங்களையும் அவர் பார்வையிடுகிறார். வாய்ப்பு கிடைத்தால் ஜப்பான் பிரதமரையும் சந்தித்து பேச சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து