எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், ஜூன் 29 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள அறைகளில் 4 பாதாள அறைகள் கோர்ட்டு உத்தரவுப்படி நீதிபதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன. மீதமுள்ள 2 பாதாள அறைகளும் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் அதாவது 18 ம் நூற்றாண்டில் திருவனந்தபுரத்தில் கட்டப்பட்டது பத்மநாபசுவாமி திருக்கோவில். இந்த கோவிலில் 6 பாதாள அறைகள் உள்ளன. இந்த அறைகள் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கின்றன. இந்த அறைகளில் சுவாமிக்கு உரிய அரிய கலைநுட்பம் கொண்ட தங்க, வைரம் மற்றும் வைடூரிய நகைகள் பழங்கால அரிய பொக்கிஷங்களைக் கொண்ட புதையல்கள் உள்ளன.
இந்த பொக்கிஷ அறைகள் பாதுகாப்பின்றி இருப்பதாக பக்தர் ஒருவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து பத்மநாபசுவாமி கோவிலை கேரள மாநில அரசே ஏற்றுக்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மன்னர் பரம்பரையைச் சேர்ந்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, கோவில் இருக்கும் 6 பாதாள அறைகளையும் திறந்துபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன் ஆகியோர் முன்னிலையில் பத்மநாபசுவாமி கோவிலின் 6 பாதாள அறைகளில் 4 அறைகள் திறக்கப்பட்டன. நீதிபதிகளுடன் கேரள மாநில கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார், கோவில் நிர்வாக அதிகாரி ஹரிக்குமார், தொல்பொருள் ஆய்வுத்துறை பிரதிநிதி ஒருவர், மனுதாரர் மற்றும் மன்னர் பரம்பரை பிரதிநிதிகளும் இருந்தனர். பாதாள அறைகள் திறக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் யாரும் அந்த இடத்தில் அனுமதிக்கப்படவில்லை. பாதாள அறைகளில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் அரிய பொக்கிஷங்கள் இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் பொருட்களின் மதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மீதமுள்ள இரண்டு பாதாள அறைகளும் விரைவில் திறந்து பார்க்கப்படும் என்றும் தெரிகிறது. இதுதொடர்பான முடிவு வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிரதிநிதிகளில் ஒருவரான எம்.என்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த பாதாள அறைகளில் உள்ள பொருட்கள் குறித்து பட்டியலிடப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்யப்படும். பட்டியல் விபரங்கள் குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்க முடியாது என்று ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.