முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் உதயகுமார் ஜெ, ஜெ, ஜெ, என குழந்தைகளுக்கு பெயர்வைத்தார் பொதுமக்கள் பாராட்டு

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்,ஜூலை.- 4 - பதவியையும், பணிவையும் கொண்டவர் அமைச்சர் உதயகுமார் என பொதுமக்கள் பாராட்டினர். மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு முதல் எழுத்து   ஜெ,ஜெ,ஜெ என துவங்குமாறு  பெயர் வைத்தார்.   இதுபற்றிய விபரம் வருமாறு சாத்தூர் அரசு மருத்துவமனை சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மருத்துவமனைக்குள் நுழைந்ததில் இருந்து அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஒவ்வொரு இடத்தையும், ஒவ்வொரு அறையையும் விடாமல்  ஆய்வு மேற்க்கொண்டார். மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளிடம்  அமைச்சர் என்கிற தோரணை இல்லாமல் கழக  தொண்டன் போல் ஒவ்வொருவரிடமும் பணிவுடன், அன்போடு அவர்கள் குறைகளை கேட்டறிந்தார். தாய்மார்களிடம் மிகுந்த பற்றோடு நலம் விசாரித்தார். ஆங்காங்கே அன்பாக ஏற்பட்ட காயத்திற்கு அறிவுரையும் வழங்கினார். மேலும் மருத்துவர்கள், செவிலியர்களிடமும் மருத்துவமனயில் உள்ள சில குறைகளை அன்போடும்,சிறிது கண்டிப்போடும் புன்னகையோடு எடுத்துரைத்தார். குறிப்பாக மருந்து கட்டும் அறை சென்ற அமைச்சர் அங்கு மேஜை ஒன்று ஒரு கால் இல்லாமல் முட்டு கொடுத்திருப்பதை  பார்த்து கால் ஒடிந்து ஒருவர்சிகிச்சை பெற இங்கு வந்தால் இங்கிருக்கும் மேஜையின் காலிற்கும் முட்டு கொடுத்து வைத்திருக்கிறீர்கள். மருத்துவம் பார்க்க வரும் நோயாளி வந்தால் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது உடனடியாக மேஜையை மாற்றுங்கள் என ஒரு ஜோக் அடித்தார். சுகாதாரமின்மை பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இங்கு சுகாதாரம் இல்லாவிட்டால் எங்கு போவார்கள் என ஆங்காங்கே குறைகளை சிரிப்போடு சிந்திக்க வைத்தார். அதே நேரத்தில் சில கண்டிப்பு இருக்க வேண்டிய இடத்திலும் கண்டிப்பையும் காட்டினார். மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்சும், ஒரு டிரைவர் இருப்பதை உடனடியாக அதிகரிக்கவும் உத்தரவிட்டார். அப்போது மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு பெயர் வைக்குமாறு 3 தாய்மார்கள் அமைச்சரிடம் கேட்டபோது ஜெயக்குமார், ஜெயலட்சுமி, ஜெயராம் என பெயர் வைத்து முதலமைச்சர் மீது இவர் கொண்ட பற்றை வெளிப்படுத்தினார். இதை பார்த்த பொதுமக்கள்   பதவி வரும்போது, பணிவு வர வேண்டும் தோழா என்கிற புரட்சித்தலைவர் பாடல் வரிகள் போல் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா கொடுத்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவியை பணிவோடு பணியாற்றி வருகிறார் அமைச்சர் உதயகுமார் என பாராட்டினர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்