முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மத்திய அமைச்சர்கள் யார்? சோனியாவுடன் மீண்டும் ஆலோசித்து இறுதி செய்தார் மன்மோகன்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 11 - மத்திய அமைச்சரவை விரிவாக்கும் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மீண்டும் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது புதிய அமைச்சர்கள் யார், யார்? யாரை யாரை நீக்குவது என்பது குறித்து இறுதி முடிவு எடுத்ததாக தெரிகிறது.  மத்திய அமைச்சரவையில் மூன்று முக்கிய இலாகாக்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி நியமிக்கப்படாமல் இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராஜா மற்றும் ஜவுளித்தறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டனர். இதில் ராசா கைது செய்யப்பட்டு டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து தயாநிதி மாறன் மீதும் சி.பி.ஐ. பிடி இறுகும் என்று தெரிகிறது. மேற்குவங்காளத்தில் திரிணாமூலம் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளதால் மத்திய அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவர் வகித்து வந்த ரயில்வே அமைச்சர் பதவிக்கும் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. அடுத்தபடியாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் அந்த மாநிலத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுத்து மக்கள் ஆதரவை பெறவும் பிரதமரும் சோனியாவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தன் மகனை அரசியலுக்கு கொண்டுவரும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முரளி தியோரா விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதனால் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து நேற்றுமுன்தினம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர்கள் பட்டியல் மற்றும் அவர்களின் இலாகாக்கள் குறித்த விபரத்தை தம்மிடம் கொடுக்கமாறு மன்மோகன் சிங்கை சோனியா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதன்படி ஒரு பட்டியலை தயாரித்துக்கொண்டு சோனியாவை மன்மோகன் சிங் சந்தித்ததாக தெரிகிறது. அப்போது இருவரும் ஆலோசனை நடத்தியதில் யார் யாரை புதிய அமைச்சர்களாக நியமிக்கலாம். எந்த அமைச்சருக்கு என்ன இலாகா கொடுக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதேசமயத்தில் பிரச்சினைக்குரிய அமைச்சர்கள் பலர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஒருவேளை தி.மு.க.வுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு முக்கியமில்லாத இலாகா ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்