முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் இருந்து 31 தமிழர்கள் கப்பல்களில் கொச்சி வந்தனர்

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

கொச்சி,ஏப்19

உள்நாட்டுப்போரில் உருக்குலைந்துள்ள ஏமனில்இருந்து 475 இந்தியர்கள்மற்றும் வங்கதேசத்தவர்கள் 2கப்பல்களில் நேற்று கொச்சிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.இவர்களில் 31பேர் தமிழர்கள் ஆவார்கள்.

ஏமன் நாட்டில் ஷியா சைதி பிரிவைச்சேர்ந்த ஹவுதிஸ் ஆதரவாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே  உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.இந்த நிலையில் அங்குள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் படி இந்தியாவின் கவராட்டி மற்றும் கோரல்  பயணிகள் கப்பல்கள் 475இந்தியர்கள் மற்றும் வங்கதேச நாட்டினரை  கடந்த 12ம் தேதியன்று திபோதியில் இருந்து ஏற்றி வந்தன..

இந்த பயணிகள் கப்பல்கள்  நேற்று மாலை கொச்சி துறைமுகத்திற்கு வந்து  சேர்ந்தன. இந்த இரு கப்பல்களில் 337 வங்கதேச நாட்டினர், 65இந்திய வம்சா வளியைச்சேர்ந்த ஏமன் நாட்டினர், 16கேரள மாநிலத்தவர்கள், 31 தமிழர்கள் மற்றும் டெல்லி, ஹரியானாவைச்சேர்ந்த தலா 8பேர் இடம் பெற்றிருந்தனர்.

கப்பல்களில் வந்த வங்கதேச மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த இருவர் மருத்துவ சிகிச்கைக்காக எர்ணா குளம்  பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களையும் வங்கதேசத்தவர்களையும் அழைத்து வந்த கவராட்டி மற்றும் கோரல் கப்பல்கள் லட்சத்தீவு நிர்வாகத்தை சேர்ந்ததாகும். இந்த கப்பல்கள் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதியன்று ஏமனில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது.

இந்த கப்பல்கள் ஏமனை நெருங்கியபோது அந் நாட்டில் நிலைமை மோசமாக இருந்தது.இதனால் அந்த கப்பல்கள்  திபோதி துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் இந்த பயணிகள் கப்பல்கள் பத்திரமாக திபோதி துறைமுகத்தை சென்றடைவதற்கு இந்திய கடற்படையைச்சேர்ந்த ஐஎன்எஸ் மும்பை கப்பலும் ஐஎன்எஸ் தர்காஷூம் பாதுகாப்பாக வந்தன. ஏமனில் இருந்து  கொச்சிக்கு வந்த பயணிகள் கப்பல்கள் பத்திரமாக வந்து சேர அதில் கப்பல் படையைச்சேர்ந்த கமண்டோக்களும் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து