முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: திரிணாமுல் தொண்டர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 2வது கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 8,756 வாக்குச்சாவடிகளில் 2,142 பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 74 லட்சம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர். 7636 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த தேர்தலில் 35 கம்பெனி மத்திய போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் பர்த்வான் மாவட்டம் சுத்வா எனும் இடத்தில் வாக்குச்சாவடி முன்பு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

அப்போது காங்கிரஸ் தொண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் இந்திரஜித்சிங் உடலில் குண்டுபாய்ந்து அதே இடத்தில் பலியானார். இதே போல் 24 பர்கானா மாவட்டம் திதாகார் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாஞ்சுசோன்கர் குண்டு காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து