முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திர வெயில் சென்றது தென் மேற்கு பருவ மழை வந்தது

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      தமிழகம்
Image Unavailable

மதுரை - கடந்த 25நாட்களாக வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெயில் நேற்றுடன் விடை பெற்றது. சுட்டெரிக்கும் வெயில் மறைந்த நிலையில் தென் மேற்கு பருவ மழை வந்தது.இதனால் மக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளானார்கள். இந்த மாதம் 4ம் தேதியன்று அக்னி நட்சத்திர வெயில் துவங்கியது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது.மக்களை வாட்டி எடுத்த இந்த வெயிலின் கொடுமைக்கு ஆந்திரா மற்றும் அதற்கு அருகாமையில் இருக்கும் தெலுங்கானா மாநிலங்களில் 1400க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இந்த இயற்கை பேரிடருக்கு மக்கள் பலி ஆவதை எண்ணி தெலுங்கானா அமைச்சர் கே.டி ராமாராவ் கடும் வேதனை அடைந்து கண்ணீர் பேட்டி அளித்திருந்தார். மக்களை உலுக்கி எடுத்த அக்னி நட்சத்திர வெயில் நேற்றுடன் விடை பெற்றது.கடும் வெயில் காலம் முடிவடைந்த நாளன்றே தென் மேற்கு பருவ மழையும் வந்தது.

இந்த பருவ மழை நேற்று இரவு மதுரை,சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்தது. வெயிலின் தாக்கத்திற்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டிய மக்கள் இந்த திடீர் மழையைப்பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த மழையால் பூமி குளிர்ந்து காணப்பட்டது. இந்த மழை மக்கள் மனதையும் குளிர வைத்ததது. பருவ மழையின் வருகையை மக்களும் விவசாயிகளும் ஆவலுடன் வரவேற்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து