எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி--ஜூலை.23 - திருச்சியில் ரூ.30கோடி மதிப்புள்ள ஹோட்டலை அபகரித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.என்நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன், அமைச்சரின் தம்பி ராமஜெயம் ஆகியோர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ள நிலையில் ஹோட்டல் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசிய சிடி ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் நேரு கைதாக கூடும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களில் பல்வேறு தி.மு.கவினர் தொடந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவரது தம்பியும் தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான மு.அன்பழகன் ஆகிய மூன்று பேர்கள் மீது ரூபாய் 30 கோடி மதிப்பிலான திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலை அபகரித்ததாக நாமக்கலைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி மாநகரில் போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து திருச்சி மாநகர போலிஸ் கமிஷனர் மாசாணமுத்து உத்திரவின் பேரில் டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாருடன் அதற்கான ஆதாரங்களையும் வாங்கி போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஏற்கெனவே டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது.
கடந்த 2005 ஆம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காஞ்சனா பிளாசா ஹோட்டலை 30 கோடி மதிப்பீட்டில் நான் கிரைய ஒப்பந்தம் செய்தேன். அதை தொடர்ந்து ஹோட்டலை நானே நிர்வாகித்து வந்தேன். இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு திருச்சி திமுக மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில் அடியாட்கள் ஆயுதங்களுடன் வந்து என்னை மிரட்டி ஹோட்டலை விட்டு அனுப்பி விட்டனர். மேலும், போலி ஆவணங்கள் தயாரித்து அந்த ஹோட்டலையும் அபகரித்து கொண்டனர். இப் பிரச்சினையில் திருச்சியில் பணியாற்றிய ஒரு போலீஸ் அதிகாரி தொடர்பு இருக்கிறது. எனவே, நான்கு பேர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த எனது ஹோட்டலை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதனிடையே முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவில் ஏற்கெனவே இது போன்று ஒரு புகாரை டாக்டர்.கதிர்வேல் திருச்சி போலீசில் கொடுத்திருந்தார். அதனை விசாரித்த காவல் துறையினர் அந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என்று புகாரை முடிவுக்கு வந்தனர். மீண்டும் அதே குற்றச்சாட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய் புகார் எனவே எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கே.என்.நேரு, அன்பழகன் ஆகியோர் கூறியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க கே.என்.நேரு, தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் ஆகியோர் மீது
கூறப்பட்டுள்ள ஹோட்டல் அபகரிப்பு புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர்.
கடந்த 2007ல் திருச்சி கன்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், டாக்டர் கதிர்வேலுடன் செல் போனில் பேசியது தொடர்பான மூன்று சி.டிக்களை புகார் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சிடியில் டாக்டர் கதிர்வேலுக்கு சொந்தமான ஹோட்டலை முன்னாள் அமைச்சர் நேருவும் அவரது தம்பி ராமஜெயமும் வாங்க விரும்புவதாகவும் எனவே, அவர்கள் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு ஹோட்டலை விட்டு விடவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் பேசியுள்ளதாக அந்த சிடியில் பதிவானதாக கூறப்படுகிறுது. அந்த சிடியை ஆய்வு செய்த திருச்சி மாநகர போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனின் குரல் தானா என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு போலீசாரை தயார் செய்து இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனிடம் செல் போனில் பேச வைத்து அந்த பேச்சை வேறு ஒரு சிடியில் பதிவு செய்தனர். பின்னர் இரண்டு சிடிக்களையும் ஒப்பிட்டு பார்த்த் போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் குரல்தான் அது என்பதை உறுதி செய்து கொண்டனர். தற்போது இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சென்னை வீராபுரத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.
டி.எஸ்.பி சுவாமிநாதனை திருச்சி போலீசார் திருச்சி வரவழைத்து அவரிடம் போலீஸ் கமிஷனர் மாசாணமுத்து, துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையில் சிடி தொடர்பாகவும், ஹோட்டல் அபகரிப்பு விவகாரம் தொடர்பகாவும் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் விசாரணை சூடு பிடித்துள்ளது. எந்த நேரத்திலும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, துணைமேயர் அன்பழகன் ஆகியோரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்யக்கூடும் என்று போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.மேலும், ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது. ஹோட்டல் அபகரிப்பு தொடர்பாக மூன்று பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரகசியமாக வைத்துக்கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2025
26 Apr 2025 -
தங்கம் விலையில் மாற்றமில்லை
26 Apr 2025சென்னை : தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்த நிலையில் நேற்று தங்கம் மாற்றமின்றி விற்பனையானது.
-
தவறுதலாக பாக். எல்லைக்குள் நுழைந்த எல்லை பாதுகாப்புப்படை வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
26 Apr 2025டெல்லி : எல்லை பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு
26 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தை கண்டுபிடித்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Apr 2025சென்னை, கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
26 Apr 2025சேலம் : சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவ
-
கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன்; விரைந்து வந்து நலம் விசாரித்த முதல்வர்
26 Apr 2025சென்னை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார்.
-
மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி
26 Apr 2025வாடிகன், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
இந்தியாவை விட்டு வெளியேற கெடு: வாகாவில் குவியும் பாகிஸ்தானியர்கள்
26 Apr 2025அட்டாரி : ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏரா
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு
26 Apr 2025வாடிகன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
-
உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்கு தற்காலிக தடை
26 Apr 2025பஹல் : உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
-
கோவை உலக புத்தொழில் மாநாட்டுக்கான இலச்சினை, சிறப்பு இணையதளத்தை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
26 Apr 2025சென்னை, கோயம்புத்தூரில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு - 2025” கான இலச்சினையை வெளியிட்டு, மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினை துணை முதல்வர் உதயநி
-
கழுத்தை அறுத்து விடுவேன் : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து சைகை செய்த பாக். தூதர்
26 Apr 2025ஜம்மு : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என பாகிஸ்தான் தூதர் சைகை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
'ரெங்கா.. கோவிந்தா.. கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
26 Apr 2025திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "ரெங்கா..
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சு
26 Apr 2025வாடிகன் : போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசிக்கொண்டனர்.
-
பயங்கரவாதிகளை தேடும் வேட்டை தீவிரம்: காஷ்மீரில் மலையேற்றத்திற்கு மாநில அரசு அதிரடி தடை
26 Apr 2025ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுவதால் மலையேற்றத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
-
அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்: காஷ்மீர் பிரச்சினை குறித்து அமெரிக்க அதிபர் கருத்து
26 Apr 2025வாஷிங்டன் : காஷ்மீர் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து: நூற்றுக்கணக்கானோர் காயம்
26 Apr 2025ஈரான் : ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 406 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனை தடைக்கு நடவடிக்கை: அமைச்சர் உறுதி
26 Apr 2025சென்னை, தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: முன்பதிவுகளை ரத்து செய்த 12 லட்சம் சுற்றுலா பயணிகள்
26 Apr 2025புதுடெல்லி, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து
-
சேலம் பட்டாசு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
26 Apr 2025சென்னை, சேலம் அருகே பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்
26 Apr 2025சென்னை : முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
-
கோவை வந்த விஜய்க்கு த.வெ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
26 Apr 2025கோவை, த.வெ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை வந்துள்ள விஜய்-க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரர் அல்ல: கனிமொழி
26 Apr 2025கோவை : பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது என தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
-
சட்டப்பேரவை மரபை காக்க வேண்டும்: எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் அறிவுரை
26 Apr 2025சென்னை, சட்டசபை மரபை காக்க வேண்டும், நையாண்டி செய்யக்கூடாது என எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுரை வழங்கியுள்ளார்.