எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.9 - முன்னாள் முதல்வர் குடும்ப பத்திரிகையை படிப்பதைவிட நல்ல புத்தகத்தை படிக்க நேரம் செலவிடலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், நாடே பாராட்டுகின்ற நல்ல பட்ஜெட். இன்னும் சொல்லப்போனால் சத்தான பட்ஜெட். முத்தான பட்ஜெட். ஐந்து முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் தன்னுடைய குடும்ப பத்திரிகையிலே ஏனோ அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்கிறார். ஐந்து முறை இந்த நாட்டை ஆண்டவர். நீங்களும் சட்டமன்ற உறுப்பினர்தானே?. உங்களையும் திருவாரூர் மக்கள் தெரியாமல் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்தானே. இந்த அவைக்கு வந்து உங்கள் கருத்தை அன்போடு சொல்லலாம் அல்லவா? வரமாட்டேன் என்கிறீர்களே. தண்டவாளத்தில் தலைவைத்தேன் என்கிறீர்கள்? இந்த சட்டமன்றத்திலேயே கால்கூட வைக்கமாட்டேன் என்கிறீர்களே. ஆனால் எங்கள் ஜெயலலிதா கடந்த ஆட்சியிலே அவை முழுவதும் நரிகளாக நீங்கள் நிறைந்திருந்தபோது சிங்கிளாக வந்தார்களே. எங்கள் ஜெயலலிதா சிங்கிளாக வந்தாலும், சிங்கமாக வந்தார்களே. அந்த தைரியம், அந்த திராணி உங்களுக்கு இருக்கின்றதா என்று நான் கேட்கின்றேன். அப்படி எதிரிகள் வருகின்ற போர் படைகளை எதிர்க்கின்ற ஆற்றல் படைத்தவர் எங்கள் ஜெயலலிதா. சரி, நீங்கள்தான் வரவில்லை. நீங்கள் அனுப்பிய உங்கள் பிள்ளை தளபதி, தன்னைத்தானே தளபதி என்று சொல்லும் அவரும் இந்த அவைக்கு வருவதில்லை. அவரும் இன்னும் ஸ்கூல் பிள்ளை மாதிரியே இருக்கின்றார். இங்குதான் உட்காருவேன். அங்குதான் உட்காருவேன். ஒன்றாகத்தான் உட்காருவோம் என்று அடம் பிடிக்கின்றார். அவ்வளவையும் முன்பே தெரிந்துதான் உங்கள் நடவடிக்கையெல்லாம் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்துதான் சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட மக்கள் உங்களுக்கு தர மறுத்துவிட்டார்கள் என்பதை இந்த நேரத்திலே நான் பணிவோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திட்டங்களே இல்லை, திட்டங்களே இல்லை, பக்கங்கள்தான் நிறைந்திருக்கிறது என்று இன்றைக்கு தன்னுடைய குடும்ப பத்திரிகையிலே அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றார் ஒரு தலைவர். நான் அன்போடு அவரிடத்திலே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், உறுப்பினர் விஜயபாஸ்கர் அடிக்கடி முன்னாள் முதல்வரின் குடும்ப பத்திரிகையை பற்றி குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நாட்டில் யாருமே அந்த குடும்ப பத்திரிகையை படிக்கவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்று யாரும் கவலைப்படவும் இல்லை. இந்த உறுப்பினர் மட்டும் ஏன் - இவ்வளவு நேரத்தை வீணடித்துக் கொண்டு தவறாமல் அதை படித்து இங்கே சட்டமன்றத்தின் நேரத்தையும் வீணடித்துக்கொண்டு, அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் அந்த முன்னாள் முதல்வரின் குடும்ப பத்திரிகை படிப்பதற்காக செலவிடும் நேரத்தை பயனுள்ளதாக வேறு ஏதாவது நல்ல புத்தகத்தை படிக்க செலவிடலாம் என்பதை அவருக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்