முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 15 நவம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்தியஅரசு நிர்ணயித்து வந்தது. ஆனால்  இந்த விலை விவரங்களை எண்ணெய் கழகமேசர்வதேச எண்ணெய் சந்தைநிலவரத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல்,டீசல்விலைகளை இந்தியஎண் ணெய் கழகம் நிர்ணயம் செய்துவருகிறது.

கடந்த 5மாதமாக பெட்ரோல்விலையும் 3மாதமாக ,டீசல் விலையும்  உயராமல் இருந்தன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத்தொடர்ந்து இந்திய எண்ணெய் கழகம் நேற்று டீசல்,பெட்ரோல் விலையை உயர்த்தியது.இந்த விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 36காசும் டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 87காசும் அதிகரித்தது.

நேற்று நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ61.06எ ன அதிகரித்தது. பெட்ரோலின் முந்தைய விலை ஒரு லிட்டருக்கு ரூ60.70எனஇருந்தது. ஒரு லிட்டர் டீசல் புதிய விலை உயர்வுப்படி ரூ46.80க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வுக்கு முந்தய விலை ஒரு லிட்டர் டீசல் ரூ45.93க்கு விற்கப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில்  பெட்ரோல், டீசல் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. அதேப்போன்று இந்திய ரூபாய்-அமெரிக்க டாலர் பரிமாற்ற விலையும் அதிகரித்து இருக்கிறது. இந்த விளைவுகளால் தற்போது பெட்ரோல் ,டீசல் விலையை உயர்த்த வேண்டி இருக்கிறது என்று இந்திய எண்ணெய் கழகம் வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்