முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் கடும் மின்வெட்டு மக்கள் 4-வது நாளாக போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா,ஆக.- 21 - பீகார் மாநிலத்தில் கடும் மின்வெட்டு நிலவுவதால் மக்கள் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. தமிழகத்தில் தி.மு.க மைனாரிட்டி ஆட்சியில் கடும் மின்வெட்டு நிலவியது போல் பீகார் மாநிலத்திலும் தற்போது கடுமையான மின்சார வெட்டு நிலவுகிறது. இதை எதிர்த்து அந்த மாநில மக்கள் கடும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று 4-வது நாளாக சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மின்சார அலுவலகங்களை அடித்து நொறுக்கினர். ரப்பர் டயர்களை எரித்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

மின்வெட்டு பிரச்சினையை சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். இருக்கைகளில் இருந்து எழுந்து மின்சார வெட்டை போக்காத மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாநிலத்தில் நிலவும் குடிநீர் மற்றும் மின்சார பற்றாக்குறையை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த உறுப்பினர்களும் ஆளும் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும் கோரினர். 

பீகார் மாநிலம் முழுவதும் கடும் மின்வெட்டு நிலவுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்