முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எஸ்.ஜி.-ல் இந்தியா இணைவதால் தெற்காசியாவில் ஆயுதப் போட்டி ஏற்படாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பதில்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அணு மூலப்பொருட்கள் விநியோக கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.-ல் இந்தியா உறுப்பினராவதால் ஆயுதப் போட்டி ஏற்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்களுக்குள் அணு மூலப் பொருட்கள், அணுஉலை தொழில் நுட்பங்களை பரஸ்பரம் விநி யோகம் செய்து கொள்கின்றன. இந்த கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இந்தியா முயற்சித்து வருகிறது.
இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரி வித்துள்ளன. ஆனால் பாகிஸ் தானும் சீனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்.எஸ்.ஜி.-ல் இந்தியா இணைந்தால் தெற்காசிய பிராந்தியத்தில் ஆயுதப்போட்டி அதிகரிக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், வாஷிங்டனில் நிருபர் களிடம் கூறியதாவது:

என்.எஸ்.ஜி.-ல் இந்தியா இணைய 2015-ம் ஆண்டு முதலே அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதனால் தெற்காசிய பிராந்தியத்தில் ஆயுதப்போட்டி ஏற்படும் என்று நாங்கள் கருத வில்லை. அணுசக்தியை ஆக்கப் பூர்வ பணிகளுக்கு பயன்படுத்த ஊக்குவிப்பதே என்.எஸ்.ஜி.யின் பிரதான கொள்கை.  விரைவில் என்.எஸ்.ஜி. கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்தியாவுக்கு எத்தனை நாடுகள் ஆதரவளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாகிஸ்தான் உட்பட எந்தவொரு நாடும் என்.எஸ்.ஜி.யில் உறுப்பு நாடாக விண்ணப்பிக்கலாம். ஆனால் எந்தெந்த நாடுகளை குழுவில் சேர்க்க வேண்டும் என்பது 48 நாடுகள் அளிக்கும் வாக்குகளைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்