முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானியின் ரதயாத்திரை வெறும் அரசியல் நாடகம் -காங்.குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப். - 14 - ஊழலுக்கு எதிராக பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ரதயாத்திரையை மேற்கொள்ள இருப்பது வெறும் அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மகாத்மா காந்தியின் பிறந்ததினமான வரும் அக்டோபர் 2 ம் தேதி ஊழலுக்கு எதிரான ரதயாத்திரையை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை தொடங்க உள்ளார். இந்த ரதயாத்திரை வெறும் அரசியில் நாடகம் என்று காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- ரத யாத்திரை என்னும் ஏமாற்று தந்திரத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலுக்கு எதிராக அத்வானி மேற்கொள்ள இருக்கும் ரதயாத்திரையால் பா.ஜ.க. அரசியல் நாடகமாடும். ரதயாத்திரையை மேற்கொள்வதால் எப்படி ஊழலை, லஞ்சத்தை ஒழிக்கமுடியும் என்று மக்களுக்கு பா.ஜ.க. விளக்க வேண்டும். கடந்த முறை அத்வானி ரதயாத்திரையை மேற்கொண்டபோது ஏற்பட்ட சிரமத்தால் மக்கள் வெறுப்படைந்தனர். அந்த வெறுப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்னொரு ரதயாத்திரையை மேற்கொள்ளப் போவதாக அத்வானி அறிவித்துள்ளார். இந்த ரதயாத்திரையாலும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கி, அமைதிக்கு அத்வானி பங்கம் விளைவிக்க மாட்டார் என்று காங்கிரஸ் கருதுகிறது. மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்தபோது, அத்வானி துணைப் பிரதமராக இருந்தார். அப்போது அவர் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? 

லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது பற்றியோ, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவது பற்றியோ எப்போதாவது பேசியதுண்டா? ஊழல் பெயரை பயன்படுத்தி அரசியல் நாடகமாடாமல், அரசியலில் உள்ள ஊழலை ஒழிக்கின்ற வழியை பா.ஜ. பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்