முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரூர் பகுதியில் விபத்துக்களை தவிர்க்க ஒளிரும் ஸ்டிக்ககர் ஒட்டும் பணி தீவிரம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      தர்மபுரி
Image Unavailable

அரூர் :சேலம் வழியாக சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும், சென்னை, பெங்களுலிருந்து சேலத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் சுங்க கட்டணத்தை தவிர்க்க தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சேலம், வேலூர் அதிக வாகனங்கள் செல்கிறது. பெரும்பாலன வாகனங்கள் இரவில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்வதால் காடு, சாலையோரங்களில் எதிரொளிப்பான் இல்லாததால் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகி அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சேலம் முதல் திருப்பத்தூர் வரையிலான சாலைகளில் பாப்பிரெட்டிப்பட்டி மஞ்சவாடி முதல் அரூர் அனுமந்தீர்த்தம் வரையிலான சாலையோரங்களில் உள்ள மரங்கள், எச்சரிக்கை போர்டுகளில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அரூர் போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்டோர் வாகன எதிரொளிப்பான் (ஒளிரும் ஸ்டிக்கர்) ஒட்டினர். மேலும் வாகன ஓட்டிகளிடையே வாகன விபத்தை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்