முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2804 கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்கள் நிரப்ப பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்க ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்களுக்குபதிவு மூப்பு பட்டியல் இன்று (9ந் தேதிக்குள்) தயாரிக்கஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தி.மலை மாவட்ட வேலைவாய்பபு அலுவலர் ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 2804 கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தமிழக அரசின் மருத்துவ பணிகள் இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அச்சான்றினை தமிழ்நாடு நர்ஸ் அன்டு மிட்வைப்ஸ் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கான கல்வி தகுதி மல்டி பர்ப்பர்ஸ் ஹெல்த் ஒர்க்கர், மிட்ட வைப்ரி டிப்ளமோ, ஹெல்த் விசிட்டர்ஸ், ஏஎன்எம் டிப்ளமோ படித்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2016 தேதியில் குறைந்த பட்ச வயது 18ம், அதிகபட்ச வயது தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்படடோர், பிற்படுத்ப்பட்டோர், முஸ்லீம் வகுப்பினருக்கு 57 வயதுக்குள்ளாகவும் இதர பிரிவினருக்கு 40வயதிற்குள்ளாகவும் விற்க வேண்டும். இந்த பணிகாலியிடத்திற்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் தயாரிப்பு பணிநடந்துவருகிறது. எனவே மேற்கண்ட தகுதியுள்ள பதிவு தாரர்கள் தங்களதுகல்வி தகுதியினை உறுதிகொள்ளும் பொருட்டு அனைத்து அசல் சான்றிதழ்கள்மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் இன்று 8ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்