முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடம்பூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு குளிர்சாதன வசதியுடன் மருத்துவ ஊர்தி

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி.

கடம்பூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுமார் ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள குளிர்சாதன வசதியுடன் மருத்துவ ஊர்தியை ஆட்சியர்எம்.ரவி குமார்  தொடங்கி வைத்தார். பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் பவர்க்ரிட் கார்பரெசன் ஆப் இந்தியா லிமிட்(மத்திய எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் ஒரு முன்னனி நவரத்னா பொதுத்துறை நிறுவனம்) மருத்துவ ஊர்திகளை தேவைப்படும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நாடுமுழுவதும் நன்கொடையாக வழங்கி வருகிறது.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுமார் ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய டாடா விங்கேர் மருத்துவ ஊர்தியை பவர்க்ரிட் நிறுவனம்  கலெக்டர் எம்.ரவி குமார் முன்னிலையில் நன்கொடையாக வழங்க, மருத்துவ ஊர்தியை கோவில்பட்டி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோராஜா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் பொது மேலாளர் ஏ.சுரேந்திரன், துணை பொது மேலாளர் சண்முகசுந்தரம், தலைமை மேலாளர் மோகன்காந்தி மற்றும் பவர்க்ரிட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்