முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரிக்கு கூடுதல் மண்ணெண்ணை வழங்கக்கோரி

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டருக்கு கூடலூர் நுகர்வோர் மையத்தலைவர் சிவசுப்பிரமணியம் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

                    15 லிட்டர்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது மண்ணெண்ணை 4 லிட்டர் மற்றும் 2 லிட்டர் என வழங்கப்பட்டு வருகிறது. மலை மாவட்டம் என்ற நிலையில் ஊரக பகுதிகளில் 10 லிட்டர் மண்ணெண்ணெயும், நகரப் பகுதிகளாக ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் 15 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்பட வேண்டிய நிலையில் தற்போது 4 லிட்டர் மற்றும் 2 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

                                   விறகு எடுக்க தடை

அடுப்பு எரிப்பதற்கு வனப்பகுதியில் விறகு எடுக்கச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அத்துடன் காட்டுயானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் வனப்பகுதியும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் விறகு எடுக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் கிடைப்பதிலும் •கவும் சிரமப்படும் நிலையில் அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் எரிபொருள் வசதியின்றி •கவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மலை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்