முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி நீக்கத்திற்கு அசாருதீன் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி நீக்கப்பட்டது தவறான முடிவு என ‌முன்னாள் வீரர் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து டோனியை நீக்குவதாகவும் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் புனே அணியை வழிநடத்துவார் எனவும் புனே அணி நிர்வாகம் அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது அசாருதீன், கடந்த சீசனில் புனே அணியின் மோசமான செயல்பாட்டிற்கு டோனியை மட்டுமே காரணமாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்றும், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்