முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் கோகுல இந்திரா சுற்றுப்பயண விபரம்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை, அக். - 11 - சிவகங்கை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்க தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார். இது குறித்து மாவட்ட செயலாளர் முருகானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  வரும் 12 ம் தேதி காலை 8 மணி முதல் 8.30 மணி வரை திருப்பத்தூரிலும், 9 மணி முதல் 10 மணி வரை காரைக்குடியிலும், 10.30 மணி முதல் 11 மணி வரை சாக்கோட்டையிலும், 11.30 மணி முதல் 12 மணி வரை தேவகோட்டையிலும் 12.30 மணி முதல் 1 மணி வரை கல்லலிலும், 1.30 மணி முதல் மதியம் 2 மணி வரை காளையார்கோவிலிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இளையான்குடியிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை மானாமதுரையிலும், 7.30 மணி முதல் 8.30 மணி வரை திருப்புவனத்திலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை சிவகங்கையிலும் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்