முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு ஜாமீன் - சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.14 - அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பதை எதிர்க்கமாட்டோம் என்று சி.பி.ஐ. அறிவித்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொழில் அதிபர்களை சிறையில் அடைத்தால் முதலீடு வராது என்று கூறிய மத்திய மந்திரி சல்மான்குர்ஷித்தை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். இதேபோல் கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பதை சி.பி.ஐ. எதிர்க்காது என்று ஊடகத்தின் வழியான செய்தி அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளிக்கிறது என்று நீதிபதிகள் காட்டமாக கூறினர்.

சி.பி.ஐ. சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரண்ராவலை நோக்கி நீதிபதிகள் சரமாரி கேள்வி தொடுத்தனர். மேலும் அறிவுரைகளும் கூறினர். அப்போது உங்களுக்கு அறிவுறுத்தல்களும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதா என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதில் கூறிய ராவல் அலைவரிசை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை எதிர்க்கக்கூடாது என்று எங்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிடவேண்டும் என்பதுதான் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரையாகும் என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தொழில் அதிபர்களை சிறையில் அடைப்பதில் நாங்கள் ஆர்வம் காட்டுவதைப்போல் அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பேச்சுத்தொனி அமைந்துள்ளது. இது எங்களுக்கு உறுத்தலாக உள்ளது. ஆனால் அமைச்சரின் கருத்தோ, அரசின் முடிவோ நீதிமன்றத்தின் நடவடிக்கையை பாதிக்காது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்