முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களிமண்குண்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்;

புதன்கிழமை, 22 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,-       ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள களிமண்குண்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், களிமண்குண்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக  92 பயனாளிகளுக்கு ரூ.53லட்சத்து 66ஆயிரத்து 859 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார்.  அப்போது அவர் பேசியதாவது:- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்;வு காணும் விதமாகவும், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாகவும் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும்  திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம்  விளக்கி கூறப்படுகிறது. 

 இன்று நடைபெறும் இம்முகாம் குறித்து இக்கிராம பொதுமக்களுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யப்பட்டு, பொதுமக்களிடமிருந்து  பல்வேறு கோரிக்கைகள் வேண்டி மொத்தம் 121 முன் மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்;வு காணப்பட்டுள்ளது. இதுதவிர இன்றைய முகாமில் தகுதியான மனுதாரர்களை தேர்வு செய்து மொத்தம் 92 பயனாளிகளுக்கு ரூ.53லட்சத்து 66ஆயிரத்து 859 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது .  இதுதவிர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதில் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வேருடன் அகற்றி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத நிலையினை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மேலும்; மாவட்டத்தில் வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்திட ஏதுவாக மொத்தம் ரூ.1531.77 லட்சம் மதிப்பீட்டில்  1,061 பணிகள் செயல்படுத்த சிறப்பு திட்டம் தயார் செய்யப்பட்டு அவற்றில் இதுவரை ரூ.1010.490 லட்சம் மதிப்பீட்டில் 831 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

     புதிதாக உறைக் கிணறுகள் வெட்டவும், பழைய கிணறுகளை ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் காவிரி குடிநீர்; விநியோக குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்திட வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இம்முகாமில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) அமிர்தலிங்கம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன்,  சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, மாவட்;ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட தொழில்மைய மேலாளர் மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகானந்தம், கீழக்கரை வட்டாட்சியர் இளங்கோ உள்பட  பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்