முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக காசநோய் நிகழ்ச்சி: கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், உலக காசநோய் நிகழ்ச்சி, நாகர்கோவில், ரோட்டரி கம்ய+னிட்டி ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் , தலைமையேற்று, பேசும்போது தெரிவித்ததாவது:-ஒவ்வொரு வருடமும் மார்ச் 24-ஆம் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு காசநோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், நமது மாவட்டத்தில், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, இவ்வருடம் விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம், சைக்கிள் பேரணி, ராட்சத பலூன்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே காசநோய் குறித்து, விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. காசநோயினால், இந்தியாவில் ஆண்டிற்கு 28 இலட்சம் நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உலக காசநோய் ஆய்வறிக்கை 2016-ன்படி, சுமார்; 4.5 இலட்சம் நபர்கள் இந்த நோயினால் மரணம் அடைகிறார்கள். இதில் 1,30,000 நபர்கள் பன்முக எதிர்ப்பு காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். கடந்த 2016-ஆம் ஆண்டில், நமது மாவட்டத்தில் 1,362 நபர்கள் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 21 சதவிகிதம் நபர்கள் சர்க்கரை நோயினாலும், 1.6 சதவிகிதம் நபர்கள் எச்ஐவி தொற்றால் நோயினாலும், 22 நபர்கள் பன்முக எதிர்ப்பு காசநோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகள் பெற்று வருகிறார்கள். மேலும், நமது மாவட்டத்தில், பன்முக எதிர்ப்பு காசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளை கண்டறிய சிபிநாட் என்ற நவீன கருவி பயன்படுத்தப்பபடுகிறது. இந்த கருவி மூலம் பரிசோதனை செய்ய ரூ. 2,500- செலவாகும். ஆனால், பொதுமக்களுக்காக இச்சேவையை, முற்றிலும் இலவசமாக தனியார் மருத்துவமனைகளுக்கும் அளித்து வருகிறோம். அதைபோல ஒளிரும் நுண்ணோக்கிகள் மூலம் பரிசோதனைகளை பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் காசநோய் கிருமியை மிக துல்லியமாக கண்டறியும் ஒரு கருவியாகும். எனவே, காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி, தொடர்சிகிச்சை மேற்கொண்டால், நோய் முற்றிலுமாகி விடும். மேலும், மருத்துவர் அறிவுரை இல்லாமல் காசநோய் மாத்திரைகளை நிறுத்தக்கூடாது என்றும், இடைநிறுத்தம் செய்தால் பன்முக எதிர்ப்பு காசநோய் உருவாகிட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.முன்னதாக, உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றிபெற்ற 17 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், 15 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், காசநோய் பணியில் சிறப்பாக பணியாற்றிய 13 மருத்துவப்பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும், நினைவுப்பரிசுகளும் வழங்கினார். மேலும், காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரை வழங்கிய 40 தன்னார்வலர்களுக்கு தலா ரூ. 1,000- ஊக்கத்தொகையினையும் வழங்கினார்.நிகழ்ச்சியில் இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு. எ.வஸந்தி, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஜி.ரவீந்திரன், துணை இயக்குநர், மருத்துவப்பணிகள் (காசநோய்) மரு. வி.பி.துரை, துணை இயக்குநர், மருத்துவப்பணிகள் (தொழுநோய்) மரு. எஸ்.கிரிஜா, திட்ட மேலாளர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு மரு. என்.டி.ஸ்டெல்லா ஜேனட், மருத்துவ அலுவலர்கள் மரு. எ.அஹமது கபீர், டி.முத்துக்குமார் (மாவட்ட காசநோய் மையம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்