முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் , மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி வழங்கினார்.

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் வி.ஜி.ராவ் நகரில் அமைந்துள்ள  நியாயவிலைக்  கடையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில்  மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்   திருவள்@ர் மாவட்டத்தில் 330 கோடி செலவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை    வழங்கும்  பணியினை இன்று (01.04.2017) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில், கூட்டுறவுத்துறை உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் செயல்படும் வி.ஜி.ராவ் நகரில் அமைந்துள்ள பகுதிநேர நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக 28 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை  மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது, கூட்டுறவு சங்கம் இணைப்பதிவாளர் கே.வி.எஸ். குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) பழனியம்மாள், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள்,  உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் தயானந்தன், வட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்