முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோட்டக்கலைத்துறை மூலம் இல்ல விழாக்களுக்கு தேவையான பூக்கன்றுகள், மரக்கன்றுகள் உற்பத்தி

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுப்புற சூழ்நிலையை மேம்படுத்தவும், நல்ல வருமானம் பெறவும் மிகவும் முக்கிய பங்கு பெறுவது தோட்டக்கலைப் பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் வாசனை திரவியங்கள்.

தற்பொழுது பெருநகரங்கள், சிறு நகரங்களில் வசிக்கும் நகர மக்களின் மத்தியில்  வீட்டுக்காய்கறித் தோட்டம் அமைத்தல் மிகவும் பிரபலமாகி வருகிறது. விவசாயிகளின் மத்தியில் குறைந்த நீர், குறைந்த பராமரிப்பு செலவில் அதிக லாபம் கொடுக்கக்கூடிய பழமரங்கள் சாகுபடி தற்சமயம் பரவி வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் பழக்கன்று தேவை, நகர மக்களின் வீட்டுக் காய்கறித் தோட்டத்திற்கான காய்கறி நாற்றுகள் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைகளை பூர்;த்தி செய்வதில் மிகவும் முக்கிய பங்கு வசிப்பது தோட்டக்கலைத் துறையின் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் ஆகும். விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகே பூவாணி மற்றும் மேலத்தொட்டியபட்டி ஆகிய இடங்களில் இரு அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பண்ணைகளில் விவசாயிகளுக்குத் தேவையான வீரிய ஒட்டு மா ரகங்கள், கொய்யா ரகங்கள், சப்போட்டா, எலுமிச்சை, வீரிய ஒட்டு ரக பப்பாளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக விற்பனை மூலமும், அரசு மான்ய திட்டங்கள் மூலமும் விவசாயிகளக்கு கிடைக்கச் செய்யப்படுகிறது. வீரிய ஒட்டு மா ரகங்கள் கன்று ஒன்று ரூ.50ஃ-, கொய்யா பதியன் ரூ.25ஃ-, வீரிய ஒட்டு பப்பாளி ரூ.16ஃ-, எலுமிச்சை ரூ.8ஃ- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பொது மக்களுக்குத் தேவையான புங்கன், வேம்பு, புளி, தேக்கு, சவுக்கு, இலவம் போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்குத் தேவையான காய்கறி நாற்றுகள், கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற நாற்றுகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு நாற்று ஒன்று ரூ.1 வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்து உள்ளவர்களுக்குத் தேவையான காய்கறி நாற்றுகள் குழித்தட்டு முறையில் முன்பதிவு செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், திருமணம், புதுமனை புகுவிழா போன்ற இல்ல விழாக்களுக்குத் தேவையான பூக்கன்றுகள், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாய பெருங்குடிகள் தங்களுக்குத் தேவையான நாற்றுகளை அரசு தோட்டக்கலைப் பண்ணை, பூவாணி மற்றும் திருவில்லிபுத்தூர் (மேலத்தொட்டியபட்டி) அணுகி பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதர தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் முன்பதிவு செய்வதற்கு 9787311798 மற்றும் 9751459404 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ச.தமிழ்வேந்தன்,பி.எஸ்.ஸி (தோ.க.),   
தோட்டக்கலை துணை இயக்குநர்(பொ)   
விருதுநகர்   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago