முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோக புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் வசதி

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாக புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் முனைவா ;நடராஜன் தெரிவித்துள்ளார்.

      குடிநீர் விநியோகம் தொடர்பான கோரிக்கை, புகார், குடிநீரை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்காக 04567-230431 என்ற தொலைபேசி வசதியுடன், 18004257040 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பொது மக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான கல நிலவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளபடியே தெரிவிப்பதற்கு ஏதுவாக 9585994700 என்ற எண்ணில் வாட்ஸ்அப் வசதி ஏற்படுத்தப்பட்டு அதில் மாவட்ட கலெக்டர், திட்ட இயக்குநர் குடிநீர் விநியோகத்தை செயல்படுத்தக்கூடிய அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஆகியோர்களது வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த வாட்ஸ்அப் குரூப்பில்  பொது மக்கள், பிறதுறை அலுவலர்கள் மற்றும் நீரியல் ஆர்வளர்களால் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதன் விபரத்தை சம்பந்தப்பட் புகார்தாரருக்கு இந்த வாட்ஸ்அப் குரூப் வாயிலாகவே தெரிவித்திட வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்