முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தேர்வு மையத்தினை கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டார்

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஏப்ரல் 2017 ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தேர்வு மையத்தினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   பார்வையிட்டார்.
15641 தேர்வு எழுதுகின்றனர்

மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தேர்வு மையத்தினை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஏப்ரல் 2017 ஆசிரியர் தகுதித்தேர்வுகள் தாள்-1 29.04.2017 அன்றும், தாள்-2 30.04.2017 அன்றும் நடைபெறவுள்ளது. இதில் தாள் -1 னை 8171 தேர்வர்களும், தாள்-2 னை 15641 தேர்வர்களும் எழுதவுள்ளனர். தாள் 2-ல் 32 மாற்றுத்திறனாளிகளும், 31 கண்பார்வையற்றவர்களும் தேர்வு எழுதுகின்றனர். தேர்விற்குரிய ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தாள் 1-ல் ஈரோடு கல்வி மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களிலும், கோபி கல்வி மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களிலும் நடைபெறுகிறது.
11 தேர்வு மையங்கள்

தாள் 2-ல் ஈரோடு கல்வி மாவட்டத்தில் 21 தேர்வு மையங்களும், கோபி கல்வி மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களிலும் நடைபெறுகிறது. இதற்காக 32 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறைஅலுவலர்கள், மேலும் 68 கூடுதல் துறைஅலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 846 அறைக் கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆண், பெண் தேர்வர்களை உடற்சோதனை செய்வதற்காக ஒவ்வொரு மையத்திலும் காவலர்கள் மற்றும் ஆசிரியர்ஃஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வர்கள் நன்முறையில் தேர்வு எழுத உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் கல்வி நிறுவன இணை இயக்குநர் வை.பாலமுருகன், முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சி.பெ.மகாராஜன், முதன்மை கல்வி அலுவலர்  அவர்களின் நேர்முக உதவியாளர்கள் வி.பூபதி, பி.சி.பிரகாஷ்வேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்