முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் மதிப்பு உயர்ந்தால் பெட்ரோல் விலை குறையும்-ஜெய்பால் ரெட்டி

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ. - 9 - இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரி வித்துள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு - மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை உயர்த்தியது. பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க் கட்சிக ளும், கூட்டணிக் கட்சிகளும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் பட்சத்தில் விலையை குறைக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியிருக்கிறார். பெட்ரோல் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த வாரம் உயர்த்தின. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என்று நிறுவனங்க ள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று பா.ஜ. எச்சரித்துள்ளது. அமைச்சரைவையில் இருந்து விலகுவோம் என கூட்ட ணி கட்சியான திரிணாமுல் மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரை சந்தி த்து தங்கள் கோரிக்கையை முன் வைக்க இருக்கிறார்கள். இந்நிலையி ல் பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் குறித்து தனியார் தொலைக் கா  ட்சி ஒன்றுக்கு பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அளி த்த பேட்டி வருமாறு -
பெட்ரோல் விலையில் மாற்றம் செய்ய குறைந்தது 15 நாள் இடைவெ ளி வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை மத்திய நிதி அமை ச்சகம் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் அல்லது அமெரிக்க டாலருக் கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் சூழ்நிலையில் பெட்ரோலிய விலையை குறைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்