முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டயாலிசீஸ் பிரிவு ஆர்டிஓ கணேஷ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டயாலிசீஸ் பிரிவில் உள்ள இயந்திரத்தின் செயல்பாட்டை திருச்செந்தூர் ஆர்டிஓ கணேஷ்குமார் துவங்கிவைத்தார்.

 டயாலிசீஸ் இயந்திரம்

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.7 லட்சம் மதிப்பில் அரசு நிதியின் மூலம் புதியதாக  டயாலிசீஸ் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் செயல்பாட்டினையும் அதற்கான பிரிவினையும் திருச்செந்தூர் ஆர்டிஓ கணேஷ்குமார் நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இந்த இயந்திரம் திருச்செந்தூர் தாலுகா பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இதனால் இப்பகுதியில் உள்ள ஏழை பொதுமக்கள் பயனடைவார்கள். இதில் தினசரி இரண்டு நபர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு செய்யமுடியும். மேலும் அதிக மக்கள் பயன் பெறும் நோக்கில் கூடுதலாக இரண்டு இயந்திரங்கள் வாங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பொன்ரவி, பாவநாசக்குமார், ராஜகுமார், அரவிந்த், ஞானசேகரன், சியாமளா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து