எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இந்தியாவின் ‘கார்ட்டோசாட்– 2இ’ உள்ளிட்ட 31 செயற்கைகோள்களுடன் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி - 38 ராக்கெட் . பின் செயற்கைகோள்கள் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
7–வது கார்ட்டோசாட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
வெற்றிகரமாக பாய்ந்தது
பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோளை நேற்று காலை 9.29 மணிக்கு சென்னைக்கு அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
14 நாடுகளை சேர்ந்த ...
இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருவதால் இந்திய செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த அதிகம் முன் வருகின்றனர். அந்தவகையில் கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த ‘கார்ட்டோசாட்– 2இ’ மற்றும் 1 நானோ செயற்கைகோளும் நேற்று வெற்றிகரமாக அனுப்பப்பட்டன. பின் 31 செயற்கைக்கோள்களும் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. கார்ட்டோசாட் 2-இ பிரதான செயற்கைக் கோளுடன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ள 15 கிலோ எடையுள்ள சிறிய ரக செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 31 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 955 கிலோ. செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டின் மொத்த எடை 320 டன். கார்ட்டோசாட் 2-இ செயற்கைக்கோளின் எடை 712 கிலோ ஆகும்.
ரூ.160 கோடியில் ...
கார்ட்டோசாட்– 2இ செயற்கை கோளில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நில அமைப்பை துல்லியமாக கண்காணித்து, தரமான புகைப்படத்தை அனுப்பும் திறன் உடையது. அதைக் கொண்டு நகர, ஊரக மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். சாலைப் போக்குவரத்து, குடிநீர் விநியோகம், கடலோரப் பகுதிகள் பயன்பாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும். இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை ரூ.160 கோடியில் இஸ்ரோ நிறைவேற்றியுள்ளது. இந்த தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பிரதமர் வாழ்த்து
செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:- “ 15 நாடுகளின் 31 செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்