முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை

வியாழக்கிழமை, 10 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பிபி.சவுத்ரி அளித்த பதில் வருமாறு: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தலைமைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. ஆதார் அட்டை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கு நிறைவடைந்த பிறகு

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமையல் காஸ் மானியம் உட்பட மத்திய அரசின் பல்வேறு சலுகைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்கு, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து